அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Wednesday, February 08, 2006

பாண்டிச்சேரியும் மலையாளப்படமும்

மலையாள இயக்குனர் கமல் இயக்கிய ஸ்வப்னக்கூடு என்ற திரைப்படம் பார்த்தேன். ஓரு மலையாள திரைப்படத்தின் களம்
பாண்டிச்சேரியாய் இருந்தது ஆச்சரியம் தந்தது.

கதை ஒன்றும் புதிதில்லை. ஒரு அதிரூப சுந்தரியை மூன்று ஆண்கள் காதலிக்கிறார்கள். அதில் அவள் விரும்பும் ஒருவனை
மணக்கிறாள். திரைக்கதையில் தான் வித்தியாசம்.

தமிழில் ஹிட் கொடுத்த வெவ்வேறு ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து நடித்தால் அது கின்னஸ் பட்டியலில் சேர்க்க வேண்டியது தான்.இதில் பிரித்விராஜ், போபன் மற்றும் ஒருவர் (பெயர் தெரியவில்லை, ஒரு தமிழ் படத்தில் ஊமையாக வருவார்) என அனைவருமே ஹிட் கொடுத்தவர்கள். மீரா ஜாஸ்மின் தான் கதையின் நாயகி. கதையும் அவரை சுற்றி தான். பிரமாதமான நடிப்பு.

தங்கும் வசதிகள் அதிகம் இல்லாத ஒரு இடத்தில் மக்கள் தங்கள் வீடுகளையே விடுதிகளாக்கி விடுகிறார்கள். வீட்டு உணவு என்ற
சலுகை வேறு. வெளிநாட்டினரும் இது போன்ற வீடுகளை நம்பி வருகின்றனர். மீரா ஜாஸ்மினும் இது போன்ற ஒரு தொழிலில்
இருக்கிறார். அதே வீட்டின் இன்னொரு பகுதிக்கு காட்டெரிங் படிக்கும் மூவர் குடி வருகின்றனர். அவர்களுக்குள் யார் மீராவை மடக்குவது என போட்டி. ஆச்சரியமூட்டும் திருப்பமாய் லைலாவும் தோன்றுகிறார்.

பாண்டியின் ஃபிரெஞ் காலணி திரையில் அருமையாய் வந்திருக்கிறது. பாடலுக்கு மட்டுமே ஃப்ரான்ஸ் சென்றிருப்பார்கள் போல.
மற்றபடி குறைந்த தயாரிப்பு செலவில் நல்ல திரைப்படம். முழு நேரம் போவதும் தெரியவில்லை.

தமிழ் இயக்குனர்களுக்கு ஏன் பாண்டியை மையமாய் வைத்து கதை ஒன்றும் தோன்றவில்லை? கடல், ஃபிரெஞ் காலணி , ஆரோவில் என அருமையான கதைகளம் இருக்க வித்தியாசமாய் ஏன் படம் அதிகம் வரவில்லை?

நீங்கள் சொன்னது: (2)

At 9:26 PM, Blogger dvetrivel சொல்வது என்னவென்றால்...

லிட்டில் ஜான், மெளனம் பேசியதே, காக்க காக்க, பாரதி, பாண்டியன், கண்ணத்தில் முத்தமிட்டால் இண்ணும் சொல்லிக் கொண்டே போகலாம். நமக்கு தமிழ் படம்னா பாட்டுக்கு பாரின் போனா தான் பாட்டாவே தெரியுது, இல்லைனா தம்மடிக்க வெளியே போறோம். அப்புறம் எப்பிடி பாண்டிச்சேரி தெரியும்??

 
At 9:47 AM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

பாரதி உண்மைக் கதை. லிட்டில் ஜான் ஒரு மந்திர தந்திர கதை.

மெளனம் பேசியதே தவிர மற்ற படங்களின் பாடல்கள் பாண்டியாக இருக்கலாம்.

நான் சொல்ல வந்தது, இத்தனை அழகு மிக்க களம் இன்னும் புதுமையான வித்தியாசமான திரைப்படம் கொடுக்க வாய்ப்புள்ளது என்பதைத் தான்.

நீங்கள் சொன்ன படங்களை மீண்டும் பார்க்க வேண்டும். செய்திக்கு நன்றி!

 

Post a Comment

<< முகப்பு