அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Thursday, February 09, 2006

தமிழ் கார்ட்டூன்

தமிழகத்தில் கார்ட்டூனிஸ்ட் என்றால் மதன் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார். அவரையும் மீறி சிலர் இருக்கிறார்கள்.
தினமணியில் வரைந்த 'உதயா' (குமார்?) வும், இப்பொழுது குமுதத்தில் பாலாவும் நெத்தியடியாக அரசியல் கார்ட்டூன்
வரைகிறார்கள். துணிச்சல் வேண்டும் நம் ஊர் அரசியல்வாதிகளை கிண்டலடிக்க.

பாலா தமிழ் கார்ட்டூனில் வண்ணம் புகுத்தியிருக்கிறார்.அவருடைய
பார்வையில் அனைவரும் புஷ்ட்டியாக இருப்பார்கள் போல.
பாலா வரையும் படங்கள் ஒரு வகையில் குழந்தைகளுக்கான காமிக் படங்கள் போல இருக்கிறது. அதனாலயே என்னவோ
பார்த்தவுடன் முகத்தில் அறையும் உண்மை நிலவரம் புலப்பட்டாலும் சிரிக்க முடிகிறது.

சில படங்கள் இங்கே.

நீங்கள் சொன்னது: (1)

At 4:33 PM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

நன்றி தமியன். நம்மில் நகைச்சுவை உணர்வு கம்மியா என்று தெரியவில்லை. வழக்கு போடுவதும் உள்ளே தள்ளுவதும், அதுவும் போதாது என பத்திரிக்கை அலுவலகம் தாக்குவதும் என எதிர்ப்பின் வடிவம் வன்முறையாகி விட்டது.

கார்ட்டூன்களை கடுமையான விமர்சனம் என எண்ணாமல் ஒரு பார்வை என எடுத்துக்கொண்டால் ரசித்துவிட்டுப் போய்விடலாம். ஆர்வம் உள்ளவர்கள் யோசிக்கலாம்.

இந்த காமிக் வடிவம் அதை தளர்த்தும் என நம்பலாம்.

 

Post a Comment

<< முகப்பு