அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Wednesday, February 15, 2006

புதுக்கணக்கு

ஒரு வன்னியரை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக அறிவித்ததன் மூலம் ஜெ.விற்கு ஒரு செக் வைத்திருக்கிறார்கள். திண்டிவனத்தின் கலகக்குரலை இதன் மூலம் அடக்கிவிட்டார்கள். அவர் பா.ம.க தலைவரின் சம்மந்தி என்பதால் இரு கட்சிகளும் இனி நெருங்கி விடும்.

இந்த புதிய வியூகத்தால் தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க கூட்டணி குலைய வாய்ப்பில்லை. இது ஏற்கனவே தெரிந்தது தான். பாமகவை ஜெயாவும் மீட்க முயலவில்லை. அதனால் முரண்டுபிடித்தாலும் சமாதானமாகிவிடுவார்கள். இப்பொழுது ம.தி.மு.க எவ்வளவு கொடுத்தால் தங்கும் என்பது தான் குழப்ப தோற்றத்தை தருகிறது. அவர்களோ இன்றைய நிலையில் 50 கேட்டு நெருக்குகிறார்கள்.

கலைஞர் கம்யூனிஸ்ட்டுகளை தியாகம் (ஆளுக்கு 4 ஒதுக்கினால் தானாகவே போய்விடுவார்கள்) செய்துவிட்டு ஒரு புதுகணக்காக
தி.மு.க - 134
காங்கிரஸ் - 35
பா.ம.க - 30
ம.தி.மு.க - 30
மற்றவை - 5
என ஒதுக்கினால் ம.தி.மு.க தங்க வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கும் 15-க்கு 30 ஒரு கெளரவமாக இருக்கும்.

தி.மு.க வின் கவலையெல்லாம் தனிப் பெரும்பான்மையாகத்தான் இருக்கும். தமிழக வாக்காளர்களின் மனப்போக்கில் வெற்றியான கூட்டணி என கருதும் போது அது தானாகவே வாக்குளை பெற்று விடும். அப்படியே குறைந்தாலும் ம.தி.மு.க வின் எதிர்காலம் கருதி அவர்கள் திமுகவையே ஆதரிப்பார்கள். ஸ்டாலின் பெயர் தோன்றும்போது தான் எதிர்ப்பு காண்பிப்பார்கள். அந்நிலையில் காங்கிரஸோ பாமகவோ ஆதரிப்பார்கள். 5 ஆண்டுகள் சுலபமாக தள்ளி விடலாம்.

என்ன செய்கிறார் கலைஞர் என பார்ப்போம்.

நீங்கள் சொன்னது: (2)

At 5:38 PM, Blogger மாயவரத்தான் சொல்வது என்னவென்றால்...

இதில் 'மற்றவை 5' என்பதை கண்டிப்பாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு செய்வார்கள் என்று நினைக்கிறேன். கூடுமானவரைக்கும் சில்லரைக் கட்சிகளுக்கு இதயத்தில் இடம் கொடுக்க முயற்சிப்பது (தியாகிகளாக்குவது?) அல்லது ரொம்ப முரண்டு பிடித்தால் உதயசூரியன் சின்ன வேட்பாளராக்குவது என்பது தான் திட்டமாக இருக்கும்.

 
At 7:21 PM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

நன்றி மாயவரத்தான். நானும் அதையே நினைக்கிறேன். அந்த 5ந்தில் முஸ்லீம் லீக், ஆர்.எம.வீ, ராஜகண்ணப்பன் போன்றவர்கள் தான் எடுத்துக் கொள்ளப்போகிறார்கள். ஏற்கனவே திருமா சூடு குடுத்திருந்தாலும் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளும் போது உதயசூரியன் சின்னத்தையே அவரகளையும் ஏற்றுக்கொள்ள செய்வது இப்போதைக்கு பாதுகாப்பானது.

 

Post a Comment

<< முகப்பு