கண்ட நாள் முதலாய்...
கண்ட நாள் முதலாய்... கேட்டவுடனேயே பிடித்து விடுகிற பாடல். பாம்பே ஜெய(இந்த sri ..யை எப்படி ஐயா டைப் செய்வது?) பாட வைத்திருக்கலாம். தாய், குழந்தை, குமரி என அனைவருக்குமே பொருந்தியிருக்கும்.
முதன் முதலாய் கேட்டதால் இது தாமரை எழுதியதா என ஆச்சரியம். ஏனென்றால் அவர் பெயரே பாடல்கள் என திரையில் வருகிறது. என்ன ராகமாய் இருக்கும் என யோசித்து கொண்டே படத்தை மீண்டும் பார்க்கையில் பாட்டு போட்டியில் லைலா மெல்லிய குரலில் "மதுவந்தி" என சொல்லி சுருதி சேர்க்க சொல்கிறார். ஆக பாடல் ஏற்கனவே கர்நாடக மேடையில் பாடப்படுவதாக இருக்க வேண்டும் என விசாரிக்கையில் "சுதா ரகுநாதன" (மட்டுமே!?) "Sriranjani" என்கிற தொகுப்பில் பாடியிருப்பது தெரிந்தது. இயற்றியவர் பெயரில்லை. கொஞ்சம் வருத்தம் தான்; யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
"அலைபாயுதே" போன்று மிக எளிதில் மனதில் உட்கார்ந்து விடுகிற பாடல் ஏன் பிரபமலமாகவில்லை என புரியவில்லை. இந்த படத்தால் மேடையில் பாடுவர்கள் என நம்பலாம்.
படம் மீதான விமர்சனம் பிறிதொரு பதிவில்... இப்போதைக்கு ஒரு வார்த்தையில் அந்த படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் "Ultimate!" (தமிழ் வார்த்தை என்னப்பா?)
நீங்கள் சொன்னது: (5)
ஈ கலைப்பை உபயோகிப்பவராய் இருந்தால், sr என்று தட்டினால், ஸ்ரீ வரும்.
இலவச கொத்தனாரே உங்கள் இமெயில் முகவரி தெரியாததால்:
நான் புதுவை பாமுனியும் ஈகலப்பையும் தான் உபயோகிக்கிறேன். ஆனாலும் இந்த sri யை டைப் செய்ய முடியவில்லை. ளச என்று தான் வருகிறது. சிவசோதி சதீசன் தந்திருக்கிற கீபோர்டு லேஅவுட்டில் sri க்கு = என்று இருக்கிறது. அப்போதும் = தான் வருகிறது.
ஈ கலைப்பையில் sr என்று தட்டினால் 'ஸ்ரீ' வரும். இல்லையேல் தாங்கள் microsoft word மூலம் எழுதி, பதிப்பவராக இருந்தால் எழுத்து உருக்ககளை (fonts) மாற்றுவதன் மூலம் 'ஸ்ரீ'அடையலாம்.
சிலவற்றில் ஸ்ரீ வருவதில்லை.
கண்ட நாள் முதலாய் பாடல் வரிகளையும் அனுப்பினால் மகிழ்ச்சி. கூட சேர்ந்து பாடலாமே அதுக்குதான்!
பிரசன்னா,
தகவலுக்கு நன்றி்.
அபிமன்யு:
நீங்கள் அடித்திருந்த "ஸ்ரீ" யை ஒரு ஃபைலில் போட்டு வைத்திருக்கிறேன். இனிமேல் கட் & பேஸ்ட் தான். நன்றி.
பாடலின் வரிகள் இதோ:
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி.
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை (கண்ட...)
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து
சுகம் தந்த கந்தனே என் காந்தனே (கண்ட...)
நீலமயில் தன்னை நெஞ்சமும் மறக்கவில்லை *
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை
கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகைதனைக் காட்டி நறுமலர் சூடிவிட்டான் (கண்ட ...)
* - இந்த வரி என் காதில் விழுந்த அளவில்... உறுதி செய்து கொள்ளுங்கள்.
பாடல் வரிகள் தந்ததற்கு நன்றி
Post a Comment
<< முகப்பு