அன்பே சிவம்
தருமியின் இடுகையையும் பின்னூட்டங்களையும் படித்த பிறகு எழுதத் தோன்றியது.
அது என்னமோ பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கமலை விட ரஜினியை தான் அதிகம் பிடித்திருக்கிறது.
சமீபத்தில் ஒரு நண்பியுடன் "அன்பே சிவம்" பற்றி பேசி கொண்டிருக்கையில் ஒரு நுணுக்கமான தகவலை சொல்லி, தான் இதை ரசிக்கவில்லை என்று சொன்னார். கமலின் நடிப்பையும் அவர் தாகத்தையும் பாராட்டிவிட்டு, இது போன்று சில முயற்சிகளால் தான் பிடிக்கவில்லை என்றும் கூறினார்.
"அன்பே சிவம்" படத்தில் வில்லன் ஒரு சிவ பக்தர். அல்லது அதை ஒரு முகமூடியாக பயன்படுத்திக்கொள்பவர். படத்தின் இறுதியில் அன்பை பொழிவது ஒரு கன்னிகாஸ்த்திரி. எல்லோருக்குமாக சென்று சேரும் படத்தில் இது போன்ற ஒரு தகவல் சொருகல் கமலின் நோக்கத்தை சந்தேகப்பட வைக்கிறது என்றார்.
சேவை என்று சொன்னாலே நமக்கு முழு அங்கி அணிந்தவர்கள் தான் ஞாபகம் வருவதால் அவ்வாறு செய்திருக்கலாம் என்று சமாதானமும் சொன்னேன். அதற்கு வில்லனை சாதாரண ஒரு ஆளாக காண்பித்திருக்கலாம். ஏன் அவரை மதத்துடன் அடையாளப்படுத்த வேண்டும் என்றார். மேலும் சமூக சேவையை முகம் தெரியாத அளவில் விளம்பர படுத்தாமல் பலர் செய்கின்றனர். அதையும் காண்பித்திருக்கலாமே என்றார்.சரியென்றே பட்டது.
கமலின் நோக்கம் அதுவாக இருக்காது என்று நம்பலாம். ஆனால் கவனம் காட்டலாமே.
எனக்கு தோன்றிய தோல்விக்கான காரணம்:
அன்பே சிவம் சரியாக போகாததில் எனக்கும் வருத்தமே. பார்த்தவர்கள் அனைவருமே பிடித்திருக்கிறது என்றே சொல்கிறார்கள். ஆனால் ஏன் ஓடவில்லை? படம் வெளியான சமயத்தில் தியேட்டரில் தான் பார்கக வேண்டும் எனப் போய் பார்த்தேன். அழுக்குத் திரையில் குறைந்த ஒலி ஒளியுடன் தான் பார்க்க முடிந்தது. வெறுத்துப் போனேன். அதே படம் அடுத்த வாரமே திருட்டு வி.சி.டியில் துல்லியமாக இருந்தது. எங்கே போய் இந்த கொடுமையை சொல்ல.
வெளிநாடு சென்ற திரும்பியவர்களுக்கோ, அல்லது தங்கி விட்டவர்களுக்கோ அவர்களை மாதவனுடன் அடையாள படுத்திக்கொள்ள முடிகிறது. ஆனால் சாதாரண பொதுஜனத்திற்கோ கம்யூனிஸ்ட்டான கமலையோ ஒரு நாகரீக மாதவனையோ தங்களுடன் பொருத்திக்கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன். அதனால் கூட இந்த படம் லாப ரீதியாக தோற்றிருக்கலாம்.
நீங்கள் சொன்னது: (2)
தயா,
உங்கள் தோழியின் லாஜீக் குழந்தைத்தனமானது..பொதுவாக இலவச ஆஸ்பத்திரிகள் நீள அங்கி அணிந்தவர்களால் நடத்தப்படுகின்றன என்பதால் மட்டுமெ கமல் அப்படி காண்பித்திருக்கலாம்.
சிவபக்தர் கான்செப்ட் படத்தின் முக்கிய குறியீடு.(பசுத்தோல் போர்த்திய
புலி(?).அவருக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த படத்தின் அடிப்படையையே புரிந்துகொள்ள முடியாது இந்துத்வா பேசினால்.
நன்றி முத்து,
படத்தின் கருத்தையோ அல்லது கமலின் திறமையையோ அவர் மறுக்கவில்லை.
நீங்களே ஒரு வார்த்தையில் இந்துத்தவா என்று பொதுமைப்படுத்திவிட்டது போல "சேவை என்றாலே..." என்ற அந்த பொதுமைப்படுத்தலை தான் அவர் கேள்வி கேட்கிறார்.
அவரின் கேள்வியும் அந்த குறியீடு கூட கமலின் உள்நோக்கத்தின் ஒரு குறியீடா என்று தான். மற்றபடி "அன்பே சிவம்" என்ற தத்துவத்தை அல்ல.
நாசர் தன் ஒவ்வொரு உரையாடலின் முடிவில் சிவனை போற்றுவதாக சொல்லும் "நமசிவாய" (அல்லது வேறு ?) மந்திரத்தை கமல் வேறு இடத்தில் கேலி பண்ணுவதாக கூறினார். அதை உறுதி செய்ய நான் மீண்டும் படத்தை பார்க்க வேண்டும்.
பசுத்தோல் போர்த்திய புலி ஏன் சிவபக்தனாக இருக்க வேண்டும் என்பது தான் கேள்வி. 910 த்தை சிவனாக உருவகப்படுத்துவதில் உள்ள வசதியினாலும் அதை தேர்ந்தெடுத்திருக்கலாம்.
Post a Comment
<< முகப்பு