அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Monday, March 06, 2006

வைகோ வீழந்துவிட்டாரா?

எல்லோரும் ஏதோ இன்றைக்கு தான் புதிதாக வைகோ ஜெ.விடம் கூட்டணி வைத்துக்கொண்டதாக நினைத்து வைகோ தரமிழந்துவிட்டார் கருணாநிதிக்கு துரோகம் செய்துவிட்டார் என அலுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் முழுதும் நடைபயணம் செய்துவிட்டு பாராளுமன்ற தேர்தலில் வாஜ்பாய்க்கு ஆதரவு என்று ஜெவிடம் தானே கூட்டணி வைத்துக்கொண்டார்.

அன்றைக்கும் நீங்கள் சொல்லும் ''அரசியலில் நேர்மை; கொள்கையில் உறுதி; பொது வாழ்வில் தூய்மை'' தானே மதிமுகவின் மந்திரச்சொல்.

ஒரு வகையில் கலைஞர் வெற்றிபெற்றுவி்ட்டார். கடந்த முறை திமுக மதிமுகவை வெளியேற்றிவிட்டது என குற்றம் சொன்னவர்கள் கூட இன்று வைகோ தவறு செய்துவிட்டார் என நினைக்கிறார்கள். இது! இது தானே கலைஞர் விரும்பியதும். ஆரம்பத்தில இருந்தே பாசம் காண்பித்து தான் வளைந்து கொடுக்கிறேன்; வைகோ தான் முடிவெடுக்கவேண்டும் என எல்லைக்கோடு வரை தள்ளிவிட்டுவிட்டார். வைகோ தான் குழம்புகிறார் குழப்புகிறார் என ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்திவிட்டார். இன்றைக்கு மக்கள் வைகோவின் முடிவை ஆதரிக்கப்போவதில்லை என அவர்கள் சார்பு மீடியாக்கள் தொடங்கிவிட்ட மாயை தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.

வைகோவை தமிழக மக்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தான் பார்க்கின்றனர். அவர் முதல்வர் ஆக தேர்ந்தெடுக்கப்படுபவதும் நடக்க போவதில்லை. அதனால் இந்த கூட்டணி அவரின் தன்மானம், நற்பெயர் என எதையும் குலைக்க போவதில்லை. மக்களுக்கு தெரியாதா கூட்டணி என்பது ஒரு தேர்தல் ஒப்பந்தம் தான் என்பது.

அதோடு ஜெயை எல்லோரும் மமதை பிடித்தவராக ஆணவத்தின் ஊற்றாக இன்னும் நினைத்துக்கொண்டிருப்பது கொஞ்சம் அதிகம் தான். மீடியாக்கள் வெளிச்சத்திற்காக 1991-96 ஆட்சியில் கெட்டதையே காட்டியது. இன்றைக்கும் அது தான் நடக்கிறது. 1991-96ல் திணமணியில் இருந்த சுதாங்கன் இன்று எங்கேயிருக்கிறார். வளர்ப்பு மகன் திருமணத்தை வர்ணணையோடு சன் டிவியில் காட்டி மக்களின் மனங்களை மாற்றிய ரபி பெர்ணார்ட் இன்று எங்கே இருக்கிறார்? ஜெயா டிவியில். இன்னும் பட்டியலிடலாம்.

ஜெ கஷ்டப்பட்டு பாடம் படித்துக்கொண்டிருக்கிறார். 1997 தேர்தல் தோல்வி 2001 அவருக்கு பாடம் வழங்கியது. 2003 தேர்தல் இன்னொரு பாடம் வழங்கியது. மேம்போக்காக பார்ப்பவர்களுக்கு குற்றம் மட்டுமே கண்டுபிடிப்பவர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை. 2006ல் ஜெயித்தால் கண்டிப்பாக கடந்த கால தவறுகளை செய்ய மாட்டார். கொஞ்சம் முயற்ச்சித்தால் நிரந்தரமாகிவிடலாம்.

அந்நிலையில் வைகோவால் தமிழகக்தில் அரசியல் செய்ய முடியாது. இவர் ஜெ எதிர் அரசியல் செய்வதை விட (யார் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் கூட) டெல்லியில் தன் முத்திரை பதித்தால் வரலாற்றில் சிறப்பிடம் பெறுவார்.

விஜயகாந்த் அவசரப்படாமல் கூட்டணி ஏதும் ஏற்படுத்திக்கொள்ளாமல் உழைத்தாரானால் 2011ல் ஆட்சியை பிடித்துவிட முடியும். அன்றைக்கும் கூட வைகோ டெல்லியில் இருப்பது தமிழகம் இன்னும் வலுப்பெற உதவும்.

கருணாநிதிக்கு பிறகு தமிழக அரசியல் ஜெ (மட்டுமே) அல்லது ஜெ vs விஜயகாந்த் என்பதாக தான் சுழலும். வைகோ கூட்டணியல் இருந்திருந்தாலும் கருணாநிதிக்கு பிந்தைய திமுகவை கைப்பற்றுவது என்பது சவால் தான். யாருமே அறிந்திராத வாசன் மூப்பனாருக்கு பிறகு தாமாக, காங்கிரஸ் என தலைவராகிவிடவில்லையா. யார் தலைவர் என்ற போட்டியில் இது பரவாயில்லை என ஒத்துக்கொள்ளவில்லையா. இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் கட்சியை கைப்பற்றுவதில் சிக்கல் ஒன்றும் இருக்கபோவதில்லை. மாறன் சகோதரர்கள் தங்களுக்கு டெல்லி அரியணை தான் வலிமை என கருதுவார்கள். அதனால் மாறனா ஸ்டாலினா என்ற போட்டியும் ஏற்படப்போவதில்லை. மு.க.ஸ்டாலின் தான் திமுகவின் அடுத்த தலைவர் என மக்கள் ஏற்கனவே உணர்ந்துவிட்டாலும் அவர் முதல்வர் ஆக தகுதியுள்ளவரா என யோசிக்கும் கால அவகாசத்தில் ஜெயோ விஜய்காந்தோ முன்னேறிவிடலாம்.

ராமதாஸ், திருமா, வாசன் என எல்லோரும் இருப்பார்கள். அவ்வளவு தான். இந்த பட்டியலில் வைகோவும் கரைந்துவிட வேண்டுமா என அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

முடிவாக வைகோ இன்றைக்கு ஒன்றும் இழந்துவிடவில்லை, வீழ்ந்தும் விடவில்லை. அவரின் சபை சட்டமன்றம் இல்லை அவர் அங்கு தேவையுமில்லை என புரிந்துகொண்டு பாராளுமன்றத்தில் தமிழகத்தின் குரல் மேலும் தெளிவாக ஒலிக்க பாடுபடவேண்டும். அதோடு வைகோ அடுத்தகட்ட சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும்.

நீங்கள் சொன்னது: (4)

At 9:54 PM, Anonymous Anonymous சொல்வது என்னவென்றால்...

// மீடியாக்கள் வெளிச்சத்திற்காக 1991-96 ஆட்சியில் கெட்டதையே காட்டியது. இன்றைக்கும் அது தான் நடக்கிறது//
I would like to differ. I knew how even small scale industrialist were threatened with tax hikes upon denying to pay some stipulated amount to the ministers. I had first hand experience in this matter. Never we had such a problem when DMK was in power.

Raj

 
At 12:25 PM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

Thank you Raj and selvan for your comments.

Raj with your personal experience, those things might be true. But it's not only with Jaya or AIADMK.

1991-96 was really bad and if you noticed every ministers went on a ride in the name of Jaya and sasikala whether they are aware or not. But this time you don't have much to complain.

DMK gave its worst when it was in power before MGR. But when he came to power in 1989, he tried to give one and same happened after 1996. He learnt a lesson and improved.

After parliment debacles she realised. If you have seen her measures almost except the section affected others were praising that action. Thus she set the iceball roll over the ice nothing to make it better by doing things affecting various sections of people. She realised quick enough to turn the tables even though the assembly elections were due in 2.5 years.

 
At 3:48 AM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

உங்கள் கருத்துக்கு நன்றி! ஜெய்.

எப்படி இது biased என்றும் கூறியிருந்தால் நான் தெளிவு கொள்ள வசதியாய் இருந்திருக்கும்.

 
At 3:48 AM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

நேற்றைய தகவலின்படி வைகோ இந்த தேர்தலில் போட்டியடப்போவதில்லை என முடிவு எடுத்திருக்கிறார். வரவேற்க கூடிய முடிவு. தன் கட்சியின் நலன் கருதியே இக்கூட்டணி என்பதற்கு வலுசேர்ப்பதற்காக இந்த முடிவு என்றாலும் நான் கூறியபடியே வைகோ சட்டமன்றத்தில் தேவையில்லை, அவர் குரல் நாடாளுமன்றத்தில் தான் அதிகம் தேவை என்பதான என் விருப்பத்தை ஒத்ததாக இருக்கிறது. நல்ல முடிவு.

 

Post a Comment

<< முகப்பு