கணவர்களே, அண்ணன்மார்களே உஷார்.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என சொல்லி மக்கள் ஏற்கனவே நகை கடைகளை ஸதம்பிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கமோ இறக்கை கட்டிக்கொண்டு விலையேறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் வாங்கும் தங்கம் குட்டி போடும் என்ற மந்திரத்தால் மோகமோ ஆர்வமோ மக்களிடம் குறையவில்லை.
இந்நேரத்தில் வெள்ளை தங்கம் மட்டும் சும்மா இருக்க முடியுமா. தங்கத்தை விட விலை கூடுதலாக இருப்பதாலும் சேட்டுக் கடையில் அடமானம் வைக்க முடியாது என்பதாலும் வசதியானவர்களும் பேஷன் ஆர்வலர்களும் மட்டுமே வாங்கி கொண்டிருந்தார்கள்.
அதனால் ஒரு தந்திரம் கண்டு பிடித்திருக்கிறார்கள். கடந்த வார 81-ஆம் ஆண்டு சிறப்பிதழான ஆனந்த விகடனில் குமுதம் ஜோதிடம் ஆசிரியர் (காழியூர் நாரயணனைக்கொண்டு ) பிளாட்டினமும் அட்சய திருதியை அன்று வாங்கினால் சுகம் கூடும் ஆரோக்கியம் கூடும் பணம் பன் மடங்காகும் என விளம்பர படுத்தியிருக்கிறார்கள்.
ஓரு புத்தகத்தில் படித்தேன். வங்கிகள் ஒரு சொத்து வாங்குங்கள் என வீட்டு கடன் திட்டத்தை நம்மிடம் விற்கிறார்கள். உண்மையில் வங்கிகள் தான் தவணை என்ற பெயரில் தங்களுக்கான வருங்கால சொத்து சேர்க்கிறார்கள் என்று. உண்மை தானே. நாம் வாழ்கின்ற வீட்டில் சராசரியாக 30 வருடம் தான் கழிக்கிறோம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். பின் வீடு வாரிசுக்கோ அல்லது வேறு வகையில் மாறிவிடுகிறது. வங்கியோ தனக்கு ஒரு சொத்து சோர்த்துவிட்டது.
அது போல அட்சய திருதியையும் வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதே நேரத்தில் அன்றைய தினத்தன்று தானம் செய்தால் புண்ணியம் பெருகும் என்றும் சொல்கிறார்கள். அதை யார் செய்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.
நீங்கள் சொன்னது: (9)
இவ்வளோ சொன்னீங்களே, அந்த அட்சய திருதி என்னிக்குன்னு சொல்லலையே(-:
ப்ளாட்டினம் எல்லாம் முடியாது, ஒம்பது கேரட்லே ஒண்ணு வாங்கினாப் போச்சு.
அதையும் கணவர் வாங்கி எனக்கு 'தானம்' செஞ்சுறலாமுல்லே:-)
now women are all somewhat intelligent so they wont go for others words unless and otherwise they need it. PURIYUTHUNGLAGO.
துளசி, போன வருட அட்சய திருதியை அன்று சென்னைக்கு வர வேண்டும் என விருப்ப படுவதாக ஒரு பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள்.
கணவர் ஒன்பது கேரட்டில் வாங்கிக்கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டுமா? பலர் கட்டிக்கிட்டதே புண்ணியங்க என மெல்ல என் காதில் புலம்புகிறார்கள். :)
சித்ரா பெளர்ணமியை ஒட்டி வருமென்று நினைக்கிறேன். மே மாதத்தில் இருக்கலாம்.
கண்டிப்பா ஒரு சேமிப்பை தொடங்குங்கள். அது தங்கம் என்றில்லை. திருதியை என்று கூட இல்லை. ஒரு நாள் தேவைப்படும்
anonymous அவர்களே,
இன்றைய புத்திசாலி பெண்களில் சிலர் ம்டுமே தங்கக்காசோ பிஸ்கெட்டோ வாங்குகிறார்கள். அல்லது சும்மா இருந்துவிடுகிறார்கள்.
நியூயார்க் டைம்ஸில் தங்கத்தின் பயன்பாட்டில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் இருப்பதாக எழுதியிருந்தார்கள்.
The United States, the world's second-largest consumer of gold, is also the world's largest holder of gold reserves.
முழு விவரம் இங்கே:
www.nytimes.com/2005/10/24/international/24GOLD. html?
ஆனால் நம் நாட்டில் இன்றைய புத்திசாலி பெண்கள் சேமிப்பு தங்கத்தை விட ஆபரண தங்கத்தில் செலவழிக்கிறார்கள். ஒரு தடவை நகை கடைக்குள் போனீர்களென்றால் ஆபரண தங்கம் என நான் சொல்வது என்னவென்று புரியும். தங்கம் இன்று வெள்ளை, சிவப்பு என வேறு உலோக கலப்பு அதிகமாகி நாகரீக நகைகளாக மாறிவிட்டிருக்கிறது. இவை பின்னால் விலையும் போகாது.
aththuzhaai, உங்கள் பெயரை எப்படி உச்சரிப்பது என புரியவில்லை.
தகவலுக்கு நன்றி. துளசி வேறு மதுரையில் தான் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
துளசி இன்னும் கூடுதலாக சித்திரை வரை தங்கி அழகரையும் மீனாட்சி (தமிழில் இப்படித்தாங்கோ!) திருக்கல்யாணத்தையும் பார்த்துவிட்டு தங்கம் என்ன வெள்ளை தங்கத்தையும் தானமாக கணவரிடமிருந்து (22 காரட்மே கிடைக்கும்) வாங்கி செல்லலாம்.
எங்கே அதுவரைக்கும் இருக்க? திரும்பி வந்தே நாலுவாரம் ஆகுதே(-:
அக்ஷய திருதியை எங்கெ ஓடிறப்போகுது? நானாச்சு அதாச்சு. என்னைக்காவது ஒரு கை பார்த்துறமாட்டேன்?
ஆமாம், பொருட்செல்வம் நிறைஞ்சவங்களுக்கு எந்நாளும் 'பொன்'நாளாமே. அப்படியா?
இருக்கும் இருக்கும். இல்லேன்னா நம்மூர் நகைக்கடைகளில் தினமும்கூடற
கூட்டத்தை....... பார்த்தாலே தெரியலையா?
துளசி, அதற்குள் திரும்பி விட்டீர்களா? எங்கு இருந்தால் என்ன? அட்சய திருதியை கொண்டாடி விடுங்கள். Tiffany&Co க்கு சென்று வைரமாகவே வாங்கிவிடுங்களேன். (உங்கள் கணவர் என்னை மன்னிப்பாராக...)
இங்கே இப்போது குடிபட்வா -Gudipadwa (தெலுங்கு/மராத்தி புது வருடம்) வரும் மார்ச் 30 வருகிறது. எல்லா வாகன வினியோகஸ்தர்களும் ஒரே போட்டிதான். கணவர்களுக்கு மனைவியர் ஏன் ஒரு Porche வாங்கிதந்தால் சுகம் என்று குமுதம் ஜோசியர் ஏ.ஆர். இராஜகோபாலன் சொல்லவில்லை ?:))
மணியன்,
Porche என்ன 20 லட்ச ருவாயில் Toyoto Camry, Scoda Roomster கூட வாங்கிதரச்சொல்லாம்.
ஏதோ மச்சினமார்களை மஞ்சள் புடைவை பச்சை புடைவை என வாங்கி பரிகாரம் செய்ய சொன்னால் பரவாயில்லை என செய்வார்கள். மனைவியைத்தானே வாங்கித் தரச் சொன்னேன் என சமாளிக்காதீர்கள் :O மாமனார் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே பழமொழி தெரியுமா?
எதுக்கும் கிளப்பி விடுங்க. டின் வாங்கறதோ காரு வாங்கறதோ உங்க சாமர்த்தியம்! :)
Post a Comment
<< முகப்பு