அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Thursday, March 30, 2006

திமிங்கலம் யாருங்கோ?

சித்திரம் பேசுதடி படம் வெளிவந்து "கானா" உலகநாதனை பட்டி தொட்டியெல்லம் பிரபலமடைடைய வைத்த வாலை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடலை எடுத்துக்கொண்டு விகடன் நையாண்டியில் கலக்கி விட்டார்கள்.

கலைஞர் விரலை நீட்டிய படி சிலை போல பாடுவதையும், அம்மா குதிரையில் பின்புறம் திரும்பி உட்கார்ந்து கொண்டு ரகளை பண்ணுவதான கற்பனையும் சும்மா நச் ரகம். படங்கள் வரைந்த ஹரனுக்கு ஒரு ஓ.


அதோடு அம்மாவை திமிங்கலம் என சோடா குடித்துவிட்டு திருமா வர்ணிப்பது செம சிரிப்பை
வரவழைத்தது.

35 வாங்கிக் கிட்டு வைகோ ஆடி வர்றார் நாட்டியம்
திருமாவோட சந்தானமும் எடுத்து வர்றார் வாத்தியம்
அள்ளி அள்ளி அள்ளித் தந்த
அல்லிராணி யாருங்கோ?
....என நிறுத்துகிறார்.

பின்னர்கோலி சோடா குடித்துவிட்டு....

திமிங்கலம் அம்மா தானுங்கோ!


மிச்சத்துக்கு கடந்த வார விகடனை படியுங்கள்.

நீங்கள் சொன்னது: (1)

At 2:00 AM, Blogger சம்மட்டி சொல்வது என்னவென்றால்...

ரட்ட இலைக்கும், பம்பரத்துக்கும் கல்யாணம்
சரவெடியால் நடக்குதுங்க கொண்டாட்டம்
அந்த போயாஸ் தோட்டத்து மாளிகையில் திருமணம்
அங்கு சரக்கடிக்கும் ஆளுக்கெல்லாம் கும்மாளம் !

ஓ... ஓ..ஓ..
http://sammatti.blogspot.com/2006/03/blog-post_17.html

 

Post a Comment

<< முகப்பு