தினசரி கடனுக்கான வட்டியே 11 கோடி ரூ. - ஜெ பேட்டி
ஜெ பேட்டி:
மூன்றே கேள்விகள் தான் இன்றைக்கு. இரண்டு கேள்விகள் அம்மாவை குஷிப்படுத்த
1. எப்படிங்க அம்மா உங்க மனசில இப்பிடி திட்டமெல்லாம் உதிக்குது?
2. உங்களை ஏன் எல்லோரும் ஒழிக்க நினைக்கிறாங்க?
(எந்த புத்திசாலித்தனமும் இல்லாத கேள்விகள். ஓரு வேளை அம்மாவை சகஜ நிலைக்கு கொண்டு வர இப்படி கேட்டாரோ!)
3. முதல் 3 ஆண்டு நடவடிக்கைகளை மக்கள் புரிந்து கொள்ளவில்லையா?
மூன்றாவது கேள்வியை சரியாக புரிந்துகொண்டு சில நடவடிக்கைளின் பிண்னணியை விளக்கியிருந்திருக்கலாம். மாறாக அதுவும் நியாயப்படுத்ததலாக முடிந்துவிடும் என நினைத்தாரோ அதை தவிர்த்தார்.
38000 கோடி கடனுடன் தினமும் 11 கோடி வட்டியாக மட்டுமே செலுத்துகின்ற நிலையில் அரசு நிதி நிலையை விட்டுச்சென்றது திமுக என குறிப்பிட்டார். இது போதாது என்று வறட்சி, சுனாமி, கனமழை வெள்ளம் என தமிழகம் இயற்கையால் பாதித்தது. மோசமான நிதிநலையை சீரமைப்பதோடு மட்டுமில்லாமல் நிவாரணப் பணிகளையும் தொடர்ச்சியாக செய்தது தன்
அரசின் பெரிய சாதனையாக குறிப்பிட்டார். சென்னையின் குடிநீர் தேவையை சமாளித்தவிதமும் தனது அரசின் சாதனையாக குறிப்பிட்டார். (இங்கும் மழை நீர் சேமிப்பு திட்டத்தின் அவசியத்தையும் விரிவாக சொல்லியருக்கலாம்)
நாம் கண்டது:
இந்த 5 ஆண்டில் ஜெ திறப்பு விழா அடிக்கல் நாட்டு விழா என எதுவாக இருந்தாலும் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே தான் செய்தார். (இது திராவிட கட்சிகளின் வரலாற்றிலேயே காணாத ஒன்று. 91-96 ஆட்சியில் இவரும் ஆடம்பரமாக தான் விழாக்கள் நடத்தினார்.) இது கண்டிப்பாக அரசு நிதியை வீணாக்காத நடவடிக்கை. இது போன்ற விஷயங்கள் சிறிதாக
இருந்தாலும் ஜெவிற்கு இதனை விளம்பரபடுத்த தெரியவில்லை. [மாறாக திமுக மத்திய அரசு விழாக்களை தங்கள் கட்சி விழா போல ஏகப்பட்ட வண்ண பத்திரிக்கை விளம்பரங்களோடும் ஆடம்பரங்களோடும் அரங்கேற்றியது]
ஆச்சரியம்:
ரபி பெர்ணார்ட் எப்போது இப்படி தொண்டரடிப்பொடியாள்வாராக மாறினார் என்பது. "காலத்தின் கொடையே" என கவிதை வாசிச்கிறார். கேள்விகளை ஜெவை பாராட்டி தொடங்குகிறார்.
அறிமுகப்படுத்தும் போது தன் பழைய நினைவுகளை சிலாகிக்கிறார். அம்மா மன்னிக்கும் குணம் உள்ளவர் என பெருமை கொள்கிறார் (இருக்காதே பின்ன! வளர்ப்பு மகன் திருமண லைவ் கவரேஜ் வீடியோவை பார்த்த பிறகும் அம்மா இவரை சும்மா விட்டாரே)
நீங்கள் சொன்னது: (7)
//தினமும் 11000 கோடி வட்டியாக மட்டுமே//
ஒரு நாளுக்கு 11000 கோடி வட்டி மட்டுமேவா ???????
ஆமா(ங்) கண்ணா! ஆமா!
அதோடு அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளங்களையும் ரிசர்வ் வங்கியில் ஓவர்டிராப்ட் எடுத்துத் தான் சமாளித்தாராம்
////தினமும் 11000 கோடி வட்டியாக மட்டுமே//
ஒரு நாளுக்கு 11000 கோடி வட்டி மட்டுமேவா ???????//
ரூபாய்க்கு பதிலா காசா இருக்குமோ? :P என்ன கணக்கு தலை சுத்துது. இவ்வளவு வட்டி தினமும் கட்ட, கடன் கொடுத்த அந்த கந்துவட்டிக்காரன் யாரோ? :P
கடன் கொடுப்பது உலக வங்கி தான். இப்படி செலவு செய்யத் தொடங்கினால் வங்கிகள் சொல்வதைத் தான் கேட்க வேண்டும். முதல் மூன்று நடவடிக்கைகளில் சில வங்கிகளின் கட்டுப்பாட்டால் எழுந்தவை எனவும் சொல்லப்படுகிறது.
This comment has been removed by a blog administrator.
தயா தினமும் ரூ.11000 கோடி இல்லை ரூ 11 கோடி எனச் சொன்னதாய் நியாபகம்
திருத்தி விட்டேன... தூக்க கலக்கத்தில் அடித்ததால்..மன்னிக்கவும்
இத்தனை பேர் சொல்றீங்களே சரியாகத் தான் இருக்கும்
Post a Comment
<< முகப்பு