அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Saturday, April 01, 2006

குமுதம்: ஜெ எக்ஸ்குளுசிவ் பேட்டி

குமுத்தில் ஜெ பற்றிய அறிமுக வாசகங்கள்:

தங்கத்தாரகை என்ற பட்டத்திற்கேற்ப தகதக்கும் முகம். எதிராளியை நூறு சதவிகிதம் அப்படியே எடைபோடும் தீர்க்கமான பார்வை. தொடரும் தன்னம்பிக்கை கலந்த செளந்தர்யப் புன்னகை.

இது நாள் வரையில் மீடியா தனக்கு ஆதரவாக இல்லை என்று வருத்தப்படாமல் இருந்த ஜெ இப்போது கண்டுக்கிறார்களே என மகிழ்ச்சி கொள்ளலாம். அவர் குமுதத்தின் வாசகராம். அவரே சொன்னது! (பத்திரிக்கைகள் கூட படிப்பாரா என்ன?...)

தினமலர், தினத்தந்தி, குமுதம் என அவர் ஆதரவு கூடியிருக்கிறது. மற்றவர்களோ இது அவர்களின் பயத்தை காட்டுகிறது என சிரிக்கிறார்கள். எது எப்படியோ ஊடகங்கள் அம்மா பக்கமும் மேளம் வாசிக்கின்றன.

பேட்டியில் வைகோ பற்றி: "வற்றாத தமிழ் உணர்வு". (ஜெவுக்கு இப்படி சிக்கலில்லாமல் தேர்ந்தெடுத்து கூட பேச வருமா என்ன? உஷாரு தான்!)

கருணாநிதி பற்றி:
தரம் தாழ்ந்த விமர்சனம், ஆபாச சொற்களை தான் பேசுதல், மற்றவர்களை பேச விட்டு அதை கேட்டு ரசித்தல், பெண்மையை கொச்சைபடுத்துதல், எதிரிகளை பழி வாங்க துடித்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொய் வழக்குகள் புனைதல், நீதி அரசர்களையே பெட்டி வாங்கி விட்டார்கள் என கொச்சைபடுத்துதல்... (கொஞ்சம் சுருக்கியிருக்கிறேன். சுயவிமர்சனமும் செய்து கொண்டு கூடுதலாக கொஞ்சம் சேர்த்திருக்கிறார்!)

மற்றபடி பேட்டியில் ஏற்கனவே தெரிந்த சங்கதிகளை ஜெயின் வாயால் வாங்கி போட்டிருக்கிறார்கள்.

நீங்கள் சொன்னது: (2)

At 2:42 AM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

இந்த வார குமுத்திலும் அதிமுக தான் முந்துவதாக செய்திகள். ஆனாலும் திமுகவின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

 
At 4:14 AM, Blogger Selvakumar சொல்வது என்னவென்றால்...

ஊடகங்களின் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் மக்கள் மன்றத்தில் பொய்யாக்கப்பட்டுள்ளன. ஜெ பேட்டி கூட கொடுக்கிறாரா? முதலில் அவர் தனது கட்சியினருக்கு எப்படி பேச வேண்டும் என்று அறிவுரை கூறினால் நல்லது. சட்டமன்றம் காமெடி மன்றமாக மாறி ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஜெக்கு குமுதம் மேல் தோன்றியுள்ள இந்த திடீர் பாசம் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மாறக்கூடும்.

செல்வகுமார்.

 

Post a Comment

<< முகப்பு