இலவச டிவி - விகடன் கட்டுரை
விகடனின் திமுக அரசியல் சார்பு தெரிந்தது தான்.
ஆனாலும் செய்தியில் உண்மையை சொல்லிவிட்டு ஓப்புக்கொள்ள மனமும் இல்லாமல் அவர்கள் பாங்கே தனி தான்.
இந்த வார ஜுனியர் விகடனில் திமுக இலவச டி.வி வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகள் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறது. அதில் அதிமுக அரசு முதல் 3 வருடங்கள் எடுத்த நடவடிக்கைகள் நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சமாக இருந்ததையும் ரிசர்வ் வங்கி விதித்த கட்டுபாடுகளையும் குறிப்பிட்டு அந்த நடவடிக்கைகள் அன்றை தேவை என சொல்கிறது.
இன்றைக்கு புதிய இலவச திட்டங்களுக்கு நதி நிலைமை இடம் கொடுக்காது என்றும் நிபுணர்கள் சொல்வதாக குறிப்பிடுகிறது.
கட்டுரையே திமுகவின் இலவச வாக்குறுதிகளின் சாத்தியம் பற்றியது தான். அதை விமர்சனமும் செய்யவில்லை. கட்டுரை என்றளவில் இதுவும் ஏற்க கூடியது தான்.
ஆனால் சந்தோசபடலாம் என ஆறுதல் தருவது புரியவில்லை. அந்த வரிகள்:
எத்தனை நாளைக்குத்தான் தமிழன் கலிங்கத்து பரணியையும், சங்கத் தமிழையும் மனதால் மென்று கொண்டிருப்பது? கொஞ்சம் கனவையும் மெல்லட்டுமே!
நீங்கள் சொன்னது: (2)
கோலங்கள் அது இது என்று பிற்போக்குதனமாக சீரியல் போட்டு சம்பாதிக்கும் "தரமான விகடன்" குழுமம் இதை ஆதரிப்பதில் என்ன ஆச்சரியம் தயா?
(சுரேஸ் கண்ணன் மன்னிக்க)
கோலத்தை இன்னும் பத்து வீடுகளில் போடலாம் என நினைக்கிறார்களோ என்னவோ?
Post a Comment
<< முகப்பு