தயாநிதி மாறன் பேட்டி - இந்தியா டுடே
இந்த வார இந்தியா டுடேவில் தயாநிதி மாறனின் வெளி வந்திருக்கிறது. இந்தியா டுடே வழக்கமாக ஜெயை மட்டம் தட்டியும் திமுகவை தாங்கியும் தான் வெளி வரும். அவர்களுடைய India Today - Conclave நிகழ்ச்சியிலும் IT & Telecom அமைச்சர் என்ற தகுதியில் சிறப்பு விருந்தினராகவும் இருந்திருக்கிறார். இந்தியா டுடேயின் சிறந்த அமைச்சர் பட்டியலில் மன்மோகன் சிங், சிதம்பரம் போன்றோருடன் தயாநிதி மாறனும் இடம் பெற்றிருக்கிறார்.
அதனாலேயே இந்த பேட்டி கவனம் பெறுகிறது. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் கார்ப்பரேட் தோரணையுடன் இருக்கும் மாறனை புகைப்படம் பிடித்து போட்டவர்கள் இன்றோ அவர் ஒரு குழப்பமான கோபத்துடன் இருப்பதான ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். பேட்டியும்
மாறனை வாருவதாக தான் இருக்கிறது.
சில கேள்வி பதில்கள்: (ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கபட்டது. முழுமையானது அல்ல. நான் திரிக்கவும் அல்ல. வேண்டுமானால் பிழையான மொழிபெயர்ப்பாக இருக்கலாம்.)
1. டெல்லியில் Reformist ஆக இருக்கும் நீங்கள் தமிழகத்தில் Popularist ஆன வாக்குறுதிகளை அள்ளித் தெளித்திருக்கிறீர்களே. Is that not a sign of desparation?
பதில்: நீங்கள் ஓன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் "Poppularism" தான் வேலை செய்யும். நாங்கள் மீண்டும் வர வேண்டுமானால் இதை செய்து தான் ஆக வேண்டும்.
2. நீங்களும் NDA யிவிலிருந்து UPA க்கு தாவினீர்களே?
பதில்: Ours is policy based, principle based stance. we were against POTA and we were fighting the cause of Vaiko. (இதில் வைகோவை சோனியா "Liar" என்று சொன்னாராம்!)
3. Jayalalitha பற்றி:
பதில்: She is an autocrat. அவர் நினைத்ததை தான் செய்வார். யாரையும் மதிக்க மாட்டார் .
தொடர்ச்சியாக இ.டுடே: But economic indicators are not showing that....
பதில்: அது நாங்கள் 96-2000 த்தில் ஏற்படுத்திய அஸ்திவாரத்தின் மேல் எழுப்பபட்டது. இவர் ஓன்றும் புதிதாக செய்துவிடவில்லை.
4. சன் டிவி பற்றி:
பதில்: அதை பற்றி கேட்காதீர்கள். என் அமைச்சம் சம்பந்தபட்ட கேள்விகளை மட்டும் கேளுங்கள்.
5. உங்கள் குடும்பம் அந்த துறையில் இருக்கும் போது நீங்கள் வகிக்கும் பதவியும் "Office of profit" ன் கீழ் வராதா?
பதில்: நான் அந்த துறை அமைச்சர் இல்லை. அதற்கு வேறு அமைச்சர் இருக்கிறார்.
6. சன் டிவிக்கு விளம்பரங்கள்....
பதில்: உண்மையில் ஜெயா டிவிக்குத்தான் கோடிக்கான விளம்பரங்கள் போகின்றன.
7. Are you subsidising Jayalalitha?
பதில்: அந்த குற்றத்தை என் மேல் சுமத்தலாம். என் துறையில் நான் கண்டிருக்கும் வளர்ச்சியே என் மேல் குற்றமாக சொல்லாம். 1500 ரூ. தயாரிப்பில் செல்போன் கொண்டு வந்தேன்.
8. ஆனால் அது உங்கள் மாநிலத்தில் இருந்து....
இல்லை. அது நாட்டிற்கே முதலீடாகத்தான் பார்க்க வேண்டும்.
இப்படி போகிறது...
நன்றி: India Today.
நீங்கள் சொன்னது: (4)
நன்றி.
இந்தியா டுடே போன்ற ஆங்கில ஏடுகள்தான் இன்னமும் கட்சி சாராமல் இன்னமும் சேய்தி தந்து கொண்டிருக்கின்றன என்பது என்னுடைய எண்ணம்...
தயநிதி மாறனின் பேட்டியின் மொழி பெயர்ப்பு, இந்தியாடொடே, தமிழ்ப் பதிப்பின் ஏப்ரல் 19 நாளிட்ட இதழில் 20௨1ஆம் பக்கங்களில் முழுமையாக தமிழிலேயே வெளிவந்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ப்ரியன்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
ரொம்ப அப்பாவி சார் நீங்க! மதுமிதாவின் பின்னூட்டத்தில் ஆனந்த விகடனையும் நடுநிலையானது என நீங்கள் நம்புவதாக சொல்லியிருக்கிறீர்கள்.
அங்கே பின்னூட்டம் இட்டிருக்கிறேன். படித்து பாருங்கள்.
இந்தியா டுடே தான் ஜெயலலிதாவை ரப்ரி தேவியை விட மக்களிடையே குறைந்த செல்வாக்கு பெற்றவர் என மதிப்பெண் போட்டது.
திணமணியை ஓரளவு நம்பலாம். அவர்கள் திமுகவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்களா என என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் ஜெவிற்கு எதிராக பல செய்திகளை வெளியிட்டார்கள். ஜெவும் கோபப்பட்டார் ஆனால் ஹிந்து அளவுக்கு விரட்டவில்லை.
நீங்கள் ஹிந்து சார்பற்றது என நம்பமாட்டீர்கள் என நினைக்கிறேன்
Post a Comment
<< முகப்பு