அ முதல் ஃ வரை

நான் படித்தது, பார்த்தது, என்னை பாதித்தது என எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள...

Thursday, February 23, 2006

ஒரே பாட்டில் சிவனும் 910ம் வரைந்தது எப்படி?

அன்பே சிவம் சன் டி.வியில் ஒளிபரப்பிய பிறகு ஆளுக்கொரு போஸ்ட் போட்டாயிற்று. (நானும் தான்.அன்பே சிவம் )

அப்படி போட்டவற்றின் ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் அதெப்படி அந்த சிவனும் 910 சேர்ந்த மூரலை ஓரே பாட்டில் வரைய முடியும் என கேட்டிருந்தார். அப்போதைக்கு ஒன்றும் தோன்றவில்லை.
கண்ட நாள் முதலாய் படத்தை நேற்றும் (Nth term என்பதை எப்படி சொல்வது?) பார்க்கையில் அது எப்படி ஒரே சம்பவத்தில் ரம்யா(லைலா) கிருஷ்ணாவை (பிரசன்னா) மன்னித்து விடுகிறார் என தோன்றியது. அதோடு கூட காதலும் தோன்றிவிடுகிறது. மூன்று மாதங்கள் பாடல் காட்சியில் கடந்துவிடுகிறது.

ஓரே பாட்டில் எப்படி என்ற கேள்விக்கு பதிலாக அன்பே சிவத்துக்கான பின்னூட்டத்தில் ஒருவர் தமிழ் இயக்குனர்கள் காலத்தை விரிவாக சொல்ல முடியாததால் பாட்டை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது சமாதானம் தருவதாய் இருந்தது.

அன்பே சிவத்தின் பாலாவையே நம்ப முடியாதவர் எப்படி அண்ணாமலை ஒரே பாட்டில் 3-4 மாடு வைத்து பால் கறந்து பால்கோவாவாக்கி பண்ணையாக்கி வெண்ணெய் வியாபரம் என கொடி நாட்டி தமிழகத்தின் பெரும் பணக்காரர் ஆவதை பார்ப்பார் என நினைக்கும் போது கவலையாக இருந்தது.

இப்படி யோசிக்க ஆரம்பித்தால் ஒரு படம் கூட பார்க்க முடியாது போல. அதனால் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல் வெவ்வேறு கால அளவு சொல்ல பயன்படுகிறது என யூகித்துவிட்டால் ரசிக்கலாம். அந்த கேள்வி கேட்டவரும் பதில் சொன்னவரும் என் கண்ணை திறந்து விட்டார்கள். அவங்க யாருன்னு கண்டுபிடிக்கணும். அந்த பதிவு இந்த பதிவுன்னு எல்லாத்தையும் படிச்சதால அவங்களை எங்கே படிச்சேன்னு மறந்து போச்சு.

நீங்கள் சொன்னது: (5)

At 5:56 PM, Blogger dondu(#11168674346665545885) சொல்வது என்னவென்றால்...

அந்தப் பாட்டில் பாடுபவர்களின் ட்ரெஸ்கள் மாறுமே. அதை வைத்தே பல நாட்கள் கடந்தன என்று கூறி விடலாமே. மற்றப்படி அன்பே சிவத்தில் ஒவ்வொரு நாளாக காண்பிக்க இது என்ன நியூ வேவ் படமா என்ன?

சில படங்களில் 6 வருடங்கள் கழித்து என்று கேப்ஷன் போடுவார்கள் (உதாரணம் ஜெண்டில்மேன்). அதுவும் ஒரு உத்தி. மோம் கீ குடியா (மெழுகு பொம்மை) என்னும் படத்தில் வெறும் பின்னணி இசையில் ஒரு மரம் பூப்பதையும், இலைகள் உதிர்வதையும், மழை பெய்வதையும், மறுபடியும் பூப்பதையும் காட்டியே சில ஆண்டுகள் கழிந்தன என்பதை சூசகமாகக் காட்டுவார்கள்.

இம்மாதிரி ஒரு பாட்டில் முரல் எப்படி வரைய முடியும் என்று கேட்கும் சில பேர்வழிகளுக்காகவே எம்.ஜி.ஆர். படம் ஒன்றில் ஜோதி லட்சுமி தன் கொண்டை ஊசியை எடுத்து அதைக் காமெரா முன்னால் வைக்க அந்த ஊசியை மெதுவாக சுழற்றி, பிறகு அதை வைத்து பூட்டைத் திறப்பதைக் காட்டுவார்கள். படம் தேடி வந்த மாப்பிள்ளை. அம்மாதிரி கூட செய்யலாம்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதை நிரூபிக்கும் முறையில் அதன் நகலை என்னுடைய கமல் பற்றியப் பதிவில் பின்னூட்டமாக இட்டு விடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_19.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 10:44 PM, Blogger - யெஸ்.பாலபாரதி சொல்வது என்னவென்றால்...

இன்னும் அந்த படத்தை விடலயா.... பயமாயிருக்குது சாமீ... போதும்ங்க..போதும்

 
At 8:33 AM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

அதெப்படி பாலபாரதி அவ்வளவு சுலபத்தில் விட முடியும். எல்லாம் ஒரு அன்பு தான்.

டோண்டு அவர்களே,
தேடி வந்த மாப்பிள்ளை குறிப்பு நிஜமா? ரொம்ப தான் முன்னேறிட்டோம் போல.

உங்க வருகைக்கும் ஊட்டத்துக்கும் நன்றி.

 
At 2:20 PM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

jsri, நன்றி!

நீங்கள் என்னுடைய அன்பே சிவம் பதிப்பை பற்றி சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். நானும் அந்த படத்தை எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேன் அப்படி தோன்றியதேயில்லை. தோழி சொன்ன பிறகு தான் (தோழி சொல்லி தட்ட முடியுமா?) அட! ஆஹா இப்படி கூடவா எனத் தோன்றியது. கிளம்பிட்டாங்கய்யா! கிளம்பிட்டாங்கயா!

குசும்பன் சொல்றது ஏத்துக்கிற மாதிரி தான் இருக்குது. ஒரு சினிமாவை சினிமாவாக மட்டும் எடுத்துகிட்டா இந்த குழப்பமெல்லாம் வராது. நம்மூரில் என்ன பிரச்சனைன்னா சினிமாவ சினிமாவ பாருங்கன்னு சொல்லிட்டு அவங்க படத்தில ஒரு கருத்தை சொல்ல ஆரம்பிச்சிருவாங்க. உதாரணத்துக்கு விருமாண்டியில் மரண தண்டனை பற்றிய கேள்வி மாதிரி.
ஃபேண்டஸின்னு சொல்லி ஊழலை எதிர்க்கனும் தண்டிக்கனும்னு அந்நியன் படம் எடுப்பாங்க. அதுலயே நம்மாளுன்னா திருத்தி மன்னிச்சு விட்றாலாம்னுங்கிற மாதிரி சொல்வாங்க.

எனக்கு இன்ன சார்பு இருக்கிறது. நான் எடுக்கும் படம் இந்த வகையில் அடங்கும் என அவர்கள் சொல்லிவிட்டால் வம்பே இல்லை. இல்லாவிட்டால் என்னவோ எடுங்க, எங்களுக்கு பொழுதுபோக்கு மட்டும் போதும் என்று சொல்லி ஒதுங்கிவிட முடியாது. அன்பா கண்டிக்க தான்
வேணும்.

 
At 3:07 PM, Blogger தயா சொல்வது என்னவென்றால்...

jsri,

தகவலுக்கு நன்றி. இப்ப தான் ஞாபகத்துக்கு வருது. ஹி...ஹி...

4, 5 நாளா. எடுக்கும் எடுக்கும். இதுல பாருங்க பாலாவோட காதல் செஞ்ச மீதி நேரம் போக தான் வரைஞ்சிருப்பாருன்னா 4 நாள் போதுமா?

ஐயோ சாமி அடிக்க வராதீங்க. சும்மா...சும்ம்மா....

 

Post a Comment

<< முகப்பு