விஜயகாந்த் - பற்றிய ஆருடம்
நண்பர்களுக்கான தனிச்சுற்றில் தவசி படம் வெளிவந்த போது எழுதிய விமர்சனம். அப்பொழுது டான்சி தீர்ப்பால் ஜெ பதவி இறக்கப்பட்டு பன்னீர் செல்வம் முதல்வராயிருந்தார்.
அதில் விஜய்காந்த் அரசியலுக்குள் நுழைவதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதாக உடுக்கை அடித்தேன். அது நிஜமாகி விட்டது.
அந்த பதிவு இங்கே தவசி - திரைப்பட விமர்சனம்
மேலும் நான் விஜயகாந்த பற்றி ஏற்கனவே எழுதியவை:
1
2
3
மற்ற தலைப்புகளில் நான் எழுதியதில் இருந்து:
இன்றைக்கோ விஜயகாந்த களத்திலிருக்கிறார். எனக்கென்னவோ விமர்சனம் செய்பவர்கள் அவரின் சக்தியை குறைத்து எடுபோடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. சிவாஜி, டி.ஆர், பாக்யராஜ் போன்று தன்னை நம்பி மட்டும் தடலாடியாக களத்தில் குதிக்கவில்லை இவர். தகுந்த முன்னேற்பாடுகளுடனும் திட்டமிடலுடனும் தான் அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். அந்த முனைப்புக்கு உழைப்புக்கு பரிசில்லாமல் போகாது.
பார்ப்போம் இதுவும் பலிக்கிறதா என்று?
நீங்கள் சொன்னது: (4)
மோகன்,
விஜய்காந்த் போட்டியிடும் தொகுதியில் தனது டெபாசிட்டைக் காப்பாற்றிக்கொள்வாரா என்றுகூட எனக்கு அவ்வப்போது சந்தேகம் வருவதுண்டு. இதைப் பற்றி ஆருடம் போல நானும் கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒன்று எழுதினேன். அது நம்ம தயா சொன்னதில் இருந்து கொஞ்சம் மாறுபட்டது. எப்படியாவது ஒரு இடத்தில் அவர் கட்சி வென்றால்கூட அது பெரிய விஷயம்தான் என்று நினைக்கிறேன். நாளை நடப்பதை யாரரறிவார்?. எல்லாம் மே 11 தெரிந்துவிடும்.
நன்றி மோகன் மற்றும் முத்து.
நான் கணிப்பது தேமுதிக குறைந்தபட்சம் 30 தொகுதிகளையாவது வெல்லும் என்று தான். 2011 தேர்தல் தான் அவருக்கு ஒரு நிலையான இடத்தை தரும்.
இந்த தடவை அதிமுக வெற்றி பெற்றால் 2011 லும் அவர் நாற்காலி கனவு நிறைவேறாமல் போகலாம். அதுவும் ஜெயின் செயல்பாடுகளை பொறுத்து மாறலாம்.
தயா,
முப்பது தொகுதிகளில் வெல்வது என்பது என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனானப்பட்ட வைகோ கட்சியிலிருந்து சட்டமன்றத்துக்கு 12 வருடமாக ஒரு உறுப்பினர்கூடப் போக முடியவில்லை. நீங்கள் சொல்வதுபோல 30 தொகுதிகள் இத்தேர்தலில் வென்றால் சந்தேகமில்லாமல் கலைஞருக்கு மாற்றாய் தமிழக அரசியலில் வந்துவிடுவார். என்னைக் கேட்டால் இத்தேர்தலில் அவர் 5 தொகுதிகள் வென்றாலே அது பெரிய விஷயம் என்றுதான் சொல்வேன். ஆனாலும் தமிழகத் தேர்தலில் அதிசயம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருவேளை விஜயகாந்த் நம்பிக்கொண்டிருப்பதுபோல தனியாக ஆட்சியமைத்தாலும்கூட அமைக்கலாம் :-).
திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக மதிமுகவை மக்கள் நினைப்பதில்லை. அதோடு புதிய சிந்தனைகளையும் இது நாள் வரை மதிமுக வெளிப்படுத்தவில்லை.
ஆனால் விஜயகாந்த் புதிய திட்டங்களோடு மக்களை சந்திக்கிறார். உதவக்கூடியவர், கட்டுப்பாடு மிக்கவர் என்பதோடு ஆளுமை திறனும் உள்ளவர் என மக்கள் நம்பினால் மாற்றம் வர வாய்ப்பிருக்கிறது.
அதுவே இன்னும் வரப்போகும் 5 ஆண்டுகளில் இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என பொறுத்தது. இவர்களும் ஏற்கனவே கழகங்களை போன்ற அணிகள் பட்டங்கள் என்று தான் பயணிக்கிறார்கள். அதிலும் விஜயகாந்த் புதிதாக சிந்தித்தால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள்.
அதோடு விஜயகாந்தை நான் நாளைய தலைவராக தான் பார்க்கிறேன். அதுவரை அவரால் இழப்புகளை தாங்க முடிய வேண்டும்.
Post a Comment
<< முகப்பு