ஆட்டோ
அந்த ஒற்றைச் சொல் ஏற்படுத்தும் உணர்வுகள் தான் எத்தனை?
அரசியல் கட்சிகளும் கடனை திருப்பி வசூலிக்க வங்கிகள் வீட்டுக்கு அனுப்பும் "ஆட்டோ"
மிரட்டினால், "பிரசவத்துக்கு இலவசம்", தத்துவங்கள், பொருளை மறந்துவிட்டால் மறக்காமல் திருப்பி
தந்துவிடும் பண்பு, பல குற்றங்களில் துப்பறிய உதவுவதல் என நம்பகமாகவும் இருக்கிறார்கள்.
சென்னையில் ஒரு ஆட்டோவை பிடிக்க வேண்டுமென்றால் எனக்குள் இன்னும் தயக்கம் இருக்கிறது.
ஊரையே சுற்றிக் காட்டி நம்மிடம் கறந்து விடுவார்கள் என்று துவங்கி ஏகப்பட்ட பயமுறுத்தல்களால்
ஆட்டோக்கள் என்றால் எச்சரிக்கை உணர்வு கூடுதல் தான். அதுவும் பரந்து விரிந்த ஊரில் நாம்
சரியான இடத்துக்கு தான் கூட்டிசெல்லப்படுகிறோமா என ஒர் அச்சம் எப்போதும் இருக்கிறது.
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு மீட்டரின் படி காசு வாங்குவதில் மட்டும் ஓர் சிக்கல். எத்தனையோ
சட்டங்கள், கட்டுப்பாடுகள், அறிவுரைகள் சொன்னாலும் இன்னும் மீட்டர்கள் வெறும் காட்சிப்பொருள்
தான்.
ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன்.. எனப் பாடி ரஜினிகாந்த் ஆட்டோ ஓட்டுனர்களின் "ஐகான்" ஆக
மாறிவிட்டார்.
ஆனால் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் படி "ஆட்டோ" ஆர்யா மிகப்பெரும் வரலாறு (கொஞ்சம் ஓவர்
தான்!) படைக்கும் என நான் எதிர்பார்ப்பது ஆர்யா, பூஜா இணைந்து வரவிருக்கும் "ஆட்டோ"
திரைப்படத்தை.
காரணம் இருக்கிறது.
இந்த வார சண்டே இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. அது ஆட்டோ ரேஸ்
பற்றியது. ஏற்கனவே இந்த ஆட்டோ ரேஸ்கள் பற்றியும் அதில் உள்ள ஆபத்து பற்றியும் ஜீ.வி சில
வருடங்களுக்கு முன் கட்டுரை எழுதியிருந்தது.
அந்த ஆட்டோ பந்தயத்தை உலக தரத்துக்கு எடுத்துச்சென்று அதை பாதுகாப்பான
விளையாட்டாகவே மாற்றுவதற்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.
"ஆட்டோ" படத்தில் தொடர்புடைய "அரவிந்த்" (தயாரிப்பாளரா என தெரியவில்லை) இந்த முயற்சியை
தொடங்கியிருக்கிறார். ஆனால் உள்ளுர் ஆட்டோக்காரர்கள் ஸ்பான்ஸர் இல்லாமல் இந்த போட்டியில்
கலந்து கொள்ள முடியாது. கட்டணம் 1300 யூரோக்கள். (ஆமாம்! Euros). கூடவே Royal Enfield பைக்
வாங்கி ரேஸில் ஆட்டோவை பின் தொடரலாம். பைக் வாங்க தனியாக காசு செலவழிக்க வேண்டும். 8
நாட்கள் நடக்கும் ரேஸ் சென்னையில் தொடங்கி பாண்டிச்சேரி தஞ்சாவூர் குற்றாலம் என கடந்து
கன்னியாகுமரியில் முடிவடையும்.
இதற்காகவே ஆட்டோக்கள் நவீன வசதிகளுடன் தயார்படுத்தப்பட்டிருக்கின்றன. "Pimping the Autos"
என்று ஆட்டோக்களை உருமாற்றுவதை கூறுகிறார்கள். இதில் புயல் சேகர் பிரபலமாம். (மீட்டரை
சூடுபடுத்துவதும் இதில் அடக்கமா என தெரியவில்லை). அந்த ஆட்டோக்கள் "ஆட்டோ" படத்திலும்
பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம்.
"ஆட்டோ" திரைப்படமும் ரேஸ் நடக்கும் நாட்களையொட்டி வெளியிடப்படுகிறது. இந்த படம்
வெளிவந்தால் ஆட்டோக்காரர்களுக்கு தங்கள் செய்யும் தொழில் மீது ஒரு பெருமை ஏற்படலாம். அந்த
பெருமைக்கு "ஆர்யா" அடையாளமாகிவிடுவார்.
படத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சில "Guidelines" களும் மறைமுகமாக உணர்த்தப்பட்டால்
சந்தோசமாக இருக்கும்.
காத்திருக்கிறேன்.
<a href="http://www.indianarc.com">www.indianarc.com</a> என்ற சுட்டியில் மேலதிகத் தகவல்
பெறலாம். இந்த ஆன்லைன் தளம் சுவராஸ்யமாக இருக்கிறது.
<b>சந்தில் சிந்து:</b>
பிரிட்டனின் கவனம் ஒரு ஸ்வடீஷ்-தமிழ்(இலங்கை) வம்சாவளியின் "டக்-டக்" மூலம்
பிரிட்டனின் கவனம் ஒரு ஸ்வடீஷ்-தமிழ்(இலங்கை) வம்சாவளியின் "டக்-டக்" மூலம்
திரும்பியிருக்கிறது. நம் ஊர் ஆட்டோக்களில் சில மாற்றங்கள் செய்து சுற்றுப்புற சூழலுக்கு மாசு
ஏற்படாதவாறு முக்கிய வாகனமாக மாறிக்கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.
<b><i>ஒரு ஆட்டோ ஜோக்:</i></b>
டிராபிக் அதிகமான நெரிசல் மிக்க ரோட்டில் ஒருவர் தன்னுடைய காரில் ஒரு ஆட்டோவின் பின்னால்
டிராபிக் அதிகமான நெரிசல் மிக்க ரோட்டில் ஒருவர் தன்னுடைய காரில் ஒரு ஆட்டோவின் பின்னால்
சென்று கொண்டிருந்திருக்கிறார். திடீரென ஒரு சந்தில் ஆட்டோ ஓடிக்க வேகமாக சென்ற கார்
டிரைவர் இதை எதிர்பார்க்காததால் ஆட்டோவில் இடித்து விட்டார். கீழே இறங்கி ஆட்டோ டிரைவரை
திட்டியவர். கை சிக்னலும் கொடுக்காமல் இன்டிக்கேட்டரும் போடாமல் எதற்காக திரும்பினாய்
என்றார்.
ஆட்டோ டிரைவர் கூலாக "நான் தான் காலை வெளியில நீட்டி காட்டினேனே" என வம்பு பண்ணினார்.
கார் டிரைவர் தலையிலடித்துக் கொண்டார்.
மேற்கண்ட உரையாடல் நிஜத்தில் நடந்தது.